கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1.05 கோடி பறிமுதல்: நீதிமன்றத்தில் ஒப்படைத்த என்.ஐ.ஏ...!!

திருவனந்தபுரம்: கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1.05 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கேரளாவை உலுக்கும் தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா கும்பலுடன் அமைச்சர்களின் 8 பணியாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தொழிற்துறை அமைச்சரின் உதவி செயலாளர் ஒருவர் பதவி விலகி இருப்பதும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா உட்பட 11 பேர் உடனான தொடர்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முதல்வரின் முதன்மை செயலாளர் மற்றும் ஐ.டி துறை செயலாளர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா உள்பட 11 பேர் மீது கொச்சி அமலாக்கப்பிரிவும் வழக்கு தொடர்ந்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் ஸ்வப்னா உட்பட 11 பேரை வரும் 27ல் ஆஜர்படுத்த எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்வப்னா உள்ளிட்டோரை காவலில் விசாரிக்க அனுமதிகோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மனு அளித்தது. மேலும், தற்போது ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1.05 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ரூ.1.05 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: