தெலுங்கானா என்கவுண்டர் வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாத காலம் அவகாசம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!!!

டெல்லி:  தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் பெண் மருத்துவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனால், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 4 பேரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, 4 பேரும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

பின்னர், இந்த என்கவுண்டர் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், வழக்கு தொடர்பாக விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. மேலும், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் என்கவுண்டர் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், விசாரணை தொடர்பாக கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை குழுவால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை குழுவின் கோரிக்கையை ஏற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: