இல்லதரசிகளை தினம் தினம் கண்ணீரில் ஆழ்த்தும் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.38,520-க்கு விற்பனை...!!!

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் குறைந்துவிட்டன. ஆகையால் இந்தியாவில் தங்கம் இறக்குமதியும் விற்பனையும் குறைந்துவிட்டதாக வர்த்தகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,815-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். இதற்கு முன்னர் இருந்த அதிகப்பட்ச விலை அனைத்தையும் இந்த விலை முறியடித்தது. இவ்வாறு உயர்ந்திருப்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆபரண தங்கம் வரலாறு காணாத உச்சமாக சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.448 உயர்ந்து, ரூ.38,184 ஆனது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.544 உயர்ந்திருந்தது. மாலையில் சற்று குறைந்தது. இருப்பினும், சவரன் ரூ.38,000ஐ தாண்டியதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் சவரன் ரூ.39,000ஐ தாண்டும் எனவும், தீபாவளிக்குள் ரூ.40,000ஐ எட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச அளவில் தங்கத்தின் முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் ஆக கூறப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.60-ஆக அதிகரித்துள்ளது. 

Related Stories: