இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: சென்னையில் இயங்கி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகக் கட்டிடத்தை முகநூலில் அவதூறாக விமர்சனம் செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருப்போரூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திருப்போரூர் தொகுதி துணை செயலாளர் முனுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அரசு, நரேஷ், சதாசிவம், பொன்னுசாமி, அஜீத், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோன்று மானாம்பதியில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பார்த்தீபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: