காக்களூர் ஏரி உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

திருவள்ளூர்: காக்களூர் ஏரியில் இருந்து புட்லூர் ஏரிக்கு உபரிநீர் செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து, சிலர் குடிசைகள் கட்டி வருவதால் கிராம விவசாயிகள் கடும் அவதியில் உள்ளனர். திருவள்ளூர் நகராட்சியை ஒட்டி காக்களூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மதகுகள் உள்ளன. மழைக்காலத்தில் இந்த ஏரியிலிருந்து உபரிநீர் புட்லூர் ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் உள்ளது. நீர்வரத்து கால்வாய் வழியாக தண்ணீர் பெற்று புட்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் பயன் பெற்று வந்தனர்.

இந்த கால்வாயை காக்களூர் எடைமேடை அருகே சிலர் ஆக்கிரமிப்பு செய்து, ஓலை கொட்டகை அமைத்து உள்ளனர். இதை வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் மழைக்காலத்தில் ஏரி நிரம்பினால் உபரி நீரானது புட்லூர் ஏரிக்கு செல்ல இயலாமல், கிராமங்களில் புகும் அபாயம் உள்ளது. எனவே, காக்களூர் ஏரியில் இருந்து புட்லூர் ஏரிக்கு உபரிநீர் செல்லும் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து, அமைத்துள்ள குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: