தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் 220 சார்பதிவாளர் பணியிடம் காலி

சென்னை: தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் 220 சார்பதிவாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பதிவுத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் கூடுதல் ஐஜி, டிஐஜி, மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர், உதவியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை, டிஎன்பிஎஸ்சி தேர்வும் நடக்கவில்லை. இதனால், பெரும்பாலான அலுவலகங்களில் சார்பதிவாளர்களுக்கு பதிலாக இளநிலை உதவியாளர்கள் கூடுதலாக அப்பொறுப்பை கவனித்து வருகின்றனர்.

அவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லாத சூழலில் பதிவுப்பணிகளில் பல்வேறு நேரங்களில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, அந்த மாதிரியான பணியிடங்களில் சார்பதிவாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால், தற்போது வரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழலில் 220 அலுவலகங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் சார்பதிவாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பதிவுத்துறை ஐஜி அலுவலகம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

Related Stories: