ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சாதனை செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட்டது விண்கலம்: அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சென்றடையும்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல் அமால் என்ற விண்கலத்தை ஜப்பான் விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடையும். வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் முதலாக விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த வாரம் இந்த விண்கலத்தை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விண்ணில் செலுத்தப்படவில்லை. அல் அமால் (நம்பிக்கை என அர்த்தம்) விண்கலம் என பெயரிடப்பட்ட இந்த விண்கலத்தின் எடை 1.3 டன் ஆகும்.

ஜப்பானின் தனேகஷிமாவில் உள்ள விண்வெளி மையத்தில் நேற்று அதிகாலை 1.58 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட்டது விண்கலம் செலுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்து, சோலார் பேனல்கள் மூலம் சக்தியை பெற்று சமிக்ஜையை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. துபாயில் உள்ள அல் கவானீஜ் விண்வெளி கட்டுப்பாட்டு அறைக்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய விண்கலம் தொடர்ந்து சமிக்ஜைகளை அனுப்பி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த விண்கலம் 49 கோடி 50 லட்சம் கி.மீ. விண்வெளியில் பயணம் செய்து 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்று அடையும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உருவாகி 50வது ஆண்டையொட்டி இந்த விண்கலத்தை அரசு செலுத்தியுள்ளது.

n செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் அல் அமால் விண்கலம், அந்த கிரகத்தின் காலநிலை, பருவநிலை, பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் எவ்வாறு வேறுபட்டுள்ளது, செவ்வாய் கிரகத்தில் ஏன் தூசி நிறைந்துள்ளது, சிவப்பு நிறமாகக் காட்சி தர என்ன காரணம், அங்குள்ள தன்மைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

n இந்த விண்கலத் திட்டத்துக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ரூ.1500 கோடி செலவிட்டுள்ளது.

n அமெரிக்க விஞ்ஞானிகளின் பயிற்சியின் கீழ் விண்கலத்தை தயார் செய்ய 6 ஆண்டுகளே ஆனது. பொதுவாக விண்கலத்தை தயாரிக்க 10-12 ஆண்டுகள் வரை ஆகும்.

Related Stories: