சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்...வானிலை மையம் அறிக்கை..!!!

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை  ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும். அடுத்து 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை,  வேலூர்,திருவள்ளூர, காஞ்சிபுரம், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்  கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

நாளை 20-07-2020: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை  பெய்யும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில  பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 32 டிகிரி குறைந்தப்பட்சம் 27 டிகிரி  செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் 3 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்த மாவட்டங்களின் விவரங்களும்  வெளியிடப்பட்டுள்ளது. காங்கேயம் திருப்பூர் 10, அரவக்குறிச்சி கரூர் 8, வால்பாறை கோவை ,உதகமண்டலம் DRMS  நீலகிரி தலா 7, சூளகிரி கிருஷ்ணகிரி 6, வெள்ளகோவில் திருப்பூர் 58, தேவலா நீலகிரி, அண்ணா பல்கலை சென்னை,  சோலையார் கோவை, உதகமண்டம் PTO நீலகிரி தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஜூலை 19 மற்றும் 20 தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில்  வீசக்கூடும்.

ஜூலை 19 மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகள்,  லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 19 மற்றும் 20 தேதிகளில் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 21 மற்றும் 22 தேதிகளில் கேரளா கடலோர பகுதிகள் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 19 முதல் 23 தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும்  மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: