கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி!: ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி!!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். கிருஷ்ணகிரியில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 345ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 188ஆக உள்ளது.  எனவே கொரோனா தொற்றின் வீரியத்தை குறைக்க பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து, கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அவர்கள் வசித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பரிசோதனையின் முடிவுகள் வெளியான நிலையில், எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக எம்.எல்.ஏவை ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர் வசித்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

Related Stories: