திட்டக்குடி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதற்கான முடிவு நேற்று வெளியானது. அதில் கொரோனா தொற்று உறுதியானது.  இதையடுத்து அவர் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்பத்தினர், கட்சியினர் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Related Stories: