சென்னை சீனிவாசபுரத்தில் விஷவாயு தாக்கி இறந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் தலா ரூ.10 லட்சம் நிதி

சென்னை சீனிவாசபுரத்தில் விஷவாயு தாக்கி இறந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த நாகராஜ், சயின்சா குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் போது நாகராஜ், சயின்சா ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். செப்டிங் டேங்கை சுத்தம் செய்வதால், ஏராளமான பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் செப்டிங் டேங்க் கிளின் செய்யும் போது உயிரிழந்தவர்கள் ஏராளமானோர் என ஆய்வுகள் தெரிவித்து உள்ளன. இந்நிலையில் சென்னையில் விஷவாயு தாக்கி இறந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: