தூத்துக்குடி கோவில்பட்டியில் பயங்கர ஆயுதங்களான துப்பாக்கி, அரிவாள் பறிமுதல்: 3 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை!!!

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அரிவாள், துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 3 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சூழலில், பலர் பணம் மற்றும் தங்கம் போன்றவற்றை கடத்தி செல்கின்றனர். இதனால் காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோட்டிலிருந்து ஒரு கார் கோவில்பட்டி சோதனைச்சாவடி வழியாக வந்துள்ளது. அப்போது காரை மறித்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதில் 3 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், காரினுள் சென்று பார்த்தபோது, பயங்கர ஆயுதங்களான அரிவாள், துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் இருந்துள்ளன. இதனை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், அதில் பயணித்த ராஜ்குமார், வினோத், சுரேந்தர் ஆகிய 3 பேரிடமும் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காரில் வந்த 3 பேரும் பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடிகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தன. இதனைத்தொடர்ந்து, 3 ரவுடிகளிடமும் கிழக்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: