கைவிடப்படும் மியூச்சுவல் பண்ட் முதலீடு? மோசமான யோசனை என நிபுணர்கள் அச்சம்

மும்பை: மியூச்சுவல் பண்ட் முதலீடு கைவிடப்படுவது மோசமான நிலையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் முக்கிய இடத்தை மியூச்சுவல் பண்ட் திட்ட முதலீடுகள் பெற்றிருக்கிறது. முறையான முதலீட்டு திட்டங்கள் மூலம் நிலையான பண சுழற்சி மற்றும் பங்குச்சந்தைக்கு தேவையான பணப்புழக்கத்தை வழங்கி வருகிறது. அதிலும் தற்போது, மியூச்சுவல் பண்ட் தொழில் வழக்கமான முதலீட்டின் முக்கியத்துவத்தை தீவிரமாக்கியுள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீடு கடந்த ஏப்ரல் மாதம் வரை நன்றாக இருந்தது. இருப்பினும் பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தை சந்தித்ததும், விலை வீழ்ச்சியடைந்தும் மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டது.

கொரோனா தொற்று பரவல், பங்கு சந்தைகளில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. எதிர்கால வளர்ச்சி குறித்த அச்சத்தை உருவாக்கி, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதை சரி செய்ய வேண்டிய ரிசர்வ் வங்கியும், பொருளாதார வளர்ச்சிக்கான எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்காமல், தவிர்த்து வருகிறது. இது ஒரு மோசமான சூழ்நிலையாகும். இப்படி இருக்கையில், மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள், தங்களின் யூனிட்களை விற்கின்றனர். மேலும், ஒவ்வொரு மாதமும் நிகர தொகை ரூ.7,000 முதல் ரூ.8000 கோடி வரையில் மியூச்சுவல் பண்ட் மேலாளர்களுக்கு பங்குகளை வாங்க கிடைத்து வந்தது. தற்போது மியூச்சுவல் பண்டை கைவிடுவதால், ஆபத்தான நிலை உருவாகி வருகிறது.

சென்செக்ஸ், நிப்டி சரிவால், பங்குச்சந்தை வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறது. இச்சூழலில் கடந்த ஏப்ரலில் குறைந்த விலையில் மியூச்சுவல் பண்ட் யூனிட்களை முதலீட்டாளர்கள் வாங்கினர். முதலீட்டை பொருத்தளவில், ஒரு சுழற்சியில் வைத்திருக்க வேண்டும். பங்குச்சந்தை, கடன் முதலீடு, திட்ட முதலீடு என மாற்றி உபயோகப்படுத்திட வேண்டும். அப்போது தான் வருவாயை ஈட்ட முடியும். அதேபோல், மியூச்சுவல் முதலீடு 10 ஆண்டுகளில் நல்ல பலனை தரும். ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், ரூ.25 லட்சம் வரையில் கிடைக்கும். அதனால், மியூச்சுவல் பண்ட் முதலீட்டை கைவிடுவது சரியானதாக அமையாது என முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: