திறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம்; பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது...பிரதமர் மோடி உரை.!!

டெல்லி: உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது, உலக இளைஞர் திறன் தினத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா இடர்பாடு நாம் பணியாற்றும் நடைமுறைகளையே மாற்றி அமைத்திருக்கிறது.

புதிய தொழில்நுட்பங்களை கற்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். போட்டி நிறைந்த உலகில் திறனை வளர்த்தல், மேம்படுத்தல் மிக முக்கியம். திறமை மற்றும் கற்றலுக்கான ஆர்வம் தான் இளைஞர்களின் மிகப்பெரிய பலம்.  இன்று உலகம் முழுவதும் புதுவிதமான வேலை கலாச்சாரம் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக நமது இளைஞர்கள் புதிய திறன்களை கற்று வருகின்றனர். திறமை என்பது நம்மிடம் இருக்கும் பொக்கிஷம் போன்றது. திறமையை  நம்மிடமிருந்து யாரும் பறித்துக் கொள்ள முடியாது என்றார். நமது திறன்,நம்மை சுயசார்பு உடையவர்களாக மாற்றும். நமது திறன் நம்மை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் மிக்கது. நமது திறனை வளர்த்துக் கொள்ளாவிட்டால்,  வாழ்வில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்றார்.

இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.வேலைவாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டுவிடக்கூடாது. திறமை என்பது வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வழி மட்டுமல்ல; அது  உற்சாகம் அளிக்கக்கூடியதும் கூட என்றும் தெரிவித்தார்.

Related Stories: