மாணவர்கள் கைகளில் புத்தகம் சேர்வது எப்போது? , தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் கல்வி பயில்வார்களா? என கல்வியாளர்கள் சரமாரி கேள்வி!!!

சென்னை: தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதற்கு முன்பாக மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டு விடுமா? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிகள் எப்போது?  திறக்கப்படும் என்பது குறித்து அரசு இன்னும் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதனால் கொரோனா பரவல் காரணமாக, தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என கூறிய நிலையில், தற்போது தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வரவேற்றுள்ள கல்வியாளர்கள், அதற்குள் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் அடங்கிய குழுக்களால் கண்காணிக்கப்படுவார்களா? என வினவி உள்ளனர். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் இருக்கும் எல்லா வீடுகளிலிலும் தொலைக்காட்சி இருக்கிறதா? என அரசு கண்டறிய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் பலர் வசிக்கும் சூழலில், எவ்வாறு? மாணவர்கள் தொலைக்காட்சியில் கல்வி பயில முடியும் எனவும் அவர்கள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: