கொரோனா தடுப்பு அதிகாரி ஆய்வு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கொரோனாவால் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சம்பத்குமார் நேற்று ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அம்மையார்குப்பத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டார். அப்போது, அவருடன் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் சந்தியா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசலு, வி.ஏ.ஓ.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: