மினி வேனில் திடீர் தீ

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் (30). மினி லோடு வேன் ஓட்டுனர். இந்நிலையில், ஆரம்பாக்கத்திலிருந்து, சென்னைக்கு லோடு ஏற்ற வந்தார். கும்மிடிப்பூண்டி பைபாசில் வந்தபோது மினி லாரி திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அபுபக்கர், வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தகவலறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார்  அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து, சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், எலக்ட்ரிக்கல் சர்க்யூட்டால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறினர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: