வேலூரில் ஒரு மருந்தகத்திற்கு வந்து சென்றவர்களில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் குடியாத்தம் நகராட்சி சவாலான பகுதியாக மாறியுள்ளது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: வேலூரில் ஒரு மருந்தகத்திற்கு வந்து சென்றவர்களில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது இதனையடுத்து வேலூர் மாநகரில் கொரோனா நோய்ப் பரவல் கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்று மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,131 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் , வேலூரில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 45 கடைகளும் மூடப்பட்டுள்ளது. மாற்று ஊழியர்களை நியமித்து நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3,131 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் 1,038 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories: