டிவி வாயிலாக பாடம் கற்பிக்க கால அட்டவணை பள்ளிகளை திறப்பது குறித்து தற்போது சிந்திக்க நேரமில்லை: ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்க குறிப்பிட்ட கால அட்டவணை வெளியிடப்படும். ஒரு வீட்டில் ஒரு டி.வி. இருந்தாலும், இரு குழந்தைகள் படித்தாலும், அவர்களுக்கு தனித்தனி நேரம் பாடங்களை படிக்கும்படிதான் அட்டவனை வெளியாகும். தற்போதைய சூழ்நிலையில், அரசு பள்ளிகளை திறப்பது குறித்து சிந்திக்க நேரமில்லை. சென்னை மாநகராட்சி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு போன் வழங்குவது வரவேற்கத்தக்கது. அங்கு குறைவான மாணவர்கள் படிப்பதால் ஆன்லைன் வசதி எளிதில் பெற்று கல்வி கற்க முடியும்.

மாநில அளவில், அதற்கு சாத்தியமில்லை. ஆன்லைனில் தனியார் பள்ளிகளில் வகுப்பு எடுப்பது தொடர்பாக, 2 நாளில் வழிமுறைகளும், கட்டணம் பெறும் முறையும் அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கண்கள் பாதிக்கும்: கோபி அருகே  டி.ஜி.புதூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‘‘மாணவர்கள் கல்வி தடைப்படக்கூடாது என்பதற்காக அரசின் சார்பில் 10 தொலைக்காட்சிகளில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் மாணவர்கள் கண் பார்வை பாதிக்கப்படாதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதால், தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தப்படுகிறது’’ என்றார். 

Related Stories: