உலக சுகாதார அமைப்பு உறுதி: கஜகஸ்தானில் புதுவகை நிமோனியா

லண்டன்: மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் 55,000 பேருக்கு கோவிட்-19 நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே அங்கு கொரோனா தொற்று காரணமாக புதுவகையான நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, இதனால் உயிரிழந்தவர்கள் அதிகம் என்பதால் கொரோனாவை விட கொடியதாக இருக்குமோ? என்று சீனா சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட தலைவர் மைக்கேல் ரையான் நேற்று விளக்கம் அளிக்கையில், கஜகஸ்தானில் நிமோனியா பரவி வருவதாக கூறப்படுவதை உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது. இங்கு கோவிட்-19 தொற்று பரவல் அதிகரித்தபடி உள்ளது. தற்போது, எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் உறுதி செய்யப்படாத கொரோனா வைரஸ் தொற்றே இருக்கக் கூடும்’’ என்று கூறினார்.

Related Stories: