பெய்ஜிங்: குறைவான செலவில் திட எரிபொருள் மூலம் அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய குவைசோ-11 என்ற ராக்கெட்டை சீனா தயாரித்தது. இதை 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் ராக்கெட் ஏவப்படவில்லை. இந்நிலையில், 3 ஆண்டுகள் கால தாமதத்திற்கு பின்னர் நேற்று ராக்கெட் ஏவப்படும் என்று சீனா அறிவித்திருந்தது. இந்த ராக்கெட் மூலம் 6 செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. வடகிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஜிகுவான் ராக்கெட் ஏவுதளத்தில் குவைசோ-11 ராக்கெட்டை நேற்று மதியம் விண்ணில் ஏவப்பட்டது.