காரைக்குடியில் தெருநாய்கள் தொல்லை தாங்க முடியல

காரைக்குடி:  காரைக்குடி நகராட்சியின் 36 வார்டுகள் மற்றும் சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட பர்மா காலனி, கழனிவாசல், போக்குவரத்து நகர், தாசில்தார் நகர், புதிய வீட்டு வசதி வாரியம், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொந்தரவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட நாய்கள் திரிகின்றன. இவை டூவீலரில் செல்வோரையும், நடந்து செல்வோரையும் சூழ்ந்து கொண்டு பாய்வது வழக்கமாக உள்ளது.

காரைக்குடியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாய்களுக்கு கு.க அறுவை சிகிச்சைகள் செய்து அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தினர். தற்போது அதுபோல் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தெருநாய்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘காரைக்குடி பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் தெருக்களில் நடமாட கூட முடியவில்லை. டூவீலர்களில் செல்வோரை விரட்டுவதால் அவர்கள் கீழே விழுந்து காயமுறுகின்றனர். எனவே நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் உடனே இப்பிரச்னையில் தலையிட்டு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்’ என்றனர்.

Related Stories: