பட்டினியால் மயங்கி கிடந்த ஆட்டோ டிரைவர் மீட்பு இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் பஸ் நிலையம் உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால், பஸ்கள் இயங்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில், ஒரு ஆட்டோ டிரைவர் பசியால் மயங்கி கிடந்தார். இதை பார்த்த இன்ஸ்பெக்டர், உடனடியாக அவரை மீட்டு, தன்னிடம் இருந்த பிஸ்கட், தண்ணீர், கையுறை, முககவசம், உணவு ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அவரை, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள், தங்களது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மனித நேயத்துடன் செயல்பட்ட கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories: