கோவையில் 'வீடியோ கால்'மூலம் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் கண்காணிப்பு!!!

கோவை:  கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ள நிலையில், வீடியோ கால் மூலம் அவர்களை கண்காணிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் 615 பேர் கொரோனா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதுவரை பல இடங்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறாமல் தப்பித்து செல்வதால், மேலும், பலருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனரா? என்பதை கண்காணிக்க கோவை மாவட்ட அதிகாரிகள் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் அவர்கள் இருப்பதை உறுதி செய்கின்றனர். மேலும், கோயம்புத்தூரில் 927 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் பூரண குணமடைந்து 308 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக இந்த கண்காணிப்பு பணிகளை அதிகாரிகள் கையாளுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோ கால் மூலம் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க பல்வேறு ஆலோசனைகளையும் அரசு வழங்குவதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்களால் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைவதர்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Related Stories: