கொரோனாவால் சென்னையை விட மதுரையில் இரு மடங்கு மரணங்கள் ஏன்?...தடுப்பு நடவடிக்கை கவலையளிக்கிறது: வெங்கடேசன் எம்.பி பேச்சு..!!

மதுரை: கொரோனாவால் சென்னையை விட மதுரையில் இரு மடங்கு மரணங்கள் ஏன் என வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை விட மதுரையில் இரு மடங்கு கொரோனா மரணங்கள் ஏற்படுவது ஏன் என முதல்வர் விளக்க வேண்டும். மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை கவலையளிக்கிறது எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையிலும் தற்போது மதுரையில் இதுவரை 5057 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில்  1160 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3811 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையை மதுரையில் கொரோனா உயிரிழப்பு அதிகமாகி வருகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேசன் எம்.பி சென்னை மாநகரை விட மதுரையில் இரு மடங்கு கொரோனா மரணங்கள் ஏற்படுவது ஏன் என முதல்வர் விளக்க வேண்டும். மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை கவலையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: