தனியார் கல்லூரிகள் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்க அனுமதி..: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சென்னை: தனியார் கல்லூரிகள் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கட்டணத்தை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அனால், தமிழிகக அரசின்  எதிர்த்து, தமிழ்நாடு தனியார் பள்ளி கல்வி கூட்டமைப்பின் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது முன்னதாக நீதிபதி மகாதேவன்  முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்கப்படும் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், இது தொடர்பாக, தவணை முறையில் கட்டணம் வசூலிக்க அரசிடம் மனு கொடுங்கள். தவணை முறையில் பணம் வசூலிக்க தமிழக  அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வராத போதிலும், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக  உயர் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், தனியார் காலுறைகள் மூன்று தவணைகளாக கல்வி கட்டணத்தை வசூல் செய்து கொள்ளலாம். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம், டிசம்பர் மாதம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் என்ற மூன்று தவணைகளில் தனியார் சுயநிதி கல்லூரிகள் மட்டும்  வசூல் செய்யலாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த நெறிமுறைகளுடன் கூடிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: