ஆண்டிபட்டியில் இன்று முதல் முழு ஊரடங்கு; பொருட்களை வாங்க பஜாரில் குவிந்த மக்கள்: சமூக இடைவெளி, முகக்கவசம் மிஸ்சிங்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், நேற்று பொருட்களை வாங்க பஜாரில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் குவிந்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்த அச்சம் இல்லாமல் பொதுமக்கள் சுற்றுவதால், நகரில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மருந்துக்கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் 10 நாட்களுக்கு மூடப்படும். மளிகைப் பொருட்கள், பால், காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் டோர் டெலிவரி செய்ய வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், நேற்று மட்டும் அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டது. இதையொட்டி பொரு ட்கள் வாங்குவதற்காக ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக நகர் பகுதிக்குள் வந்தனர். பஜார் வீதிகளில் சமூக இடைவெளி இன்றியும், பலர் முகக்கவசம் அணியாமலும் உலா வந்ததால் நோய் தொற்று அச்சம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. மேலும், நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: