மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை வழக்கை விசாரணைக்கு ஏற்றது சிபிஐ!!

சென்னை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளதையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே 5 பேரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார்.அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம் ஒன்றை எழுதினார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரிக்க முதல்வர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சாத்தான்குளம் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விசாரணைக்கு ஏற்றது சி.பி.ஐ. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: