மாணவர்கள் கண்ணில் மண்ணை தூவிய கொரோனா..!! கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி..!!

டெல்லி: இந்தியா முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இறுதி தேர்வுகளை சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.

இந்த சூழலில் பல்கலைக்கழக, கல்லூரிகள் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து எந்த தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வராமல் உள்ளது. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். ஆனால், ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்வுப்பணிகள் நிலுவையில் உள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஊரடங்கு முடிந்தாலும் இயல்பு நிலை திரும்புவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

எனவே, கல்லூரிகள், பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு கல்லூரி மற்றும் பல்கலை. மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம், அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:அனைத்து கல்லூரிகள், பல்கலை.களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம். இதில் யு.ஜி.சி. வழிகாட்டுதல்களின்டி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: