கீழடி 6-ம் கட்ட அகழாய்வு: அகரத்தில் மண்பானைகள் அதிகளவில் கண்டுபிடிப்பு.. அன்ன சத்திரமாக இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் தகவல்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று  வரும் 6ம் கட்ட அகழாய்வில் அகரம் கிராமத்தில் தொடர்ச்சியாக மண் பானைகள் கிடைக்கப்படுவதால் அந்த பகுதி அன்ன சத்திரமாக இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. பண்டைய மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு தொன்மையான பொருட்கள் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அகரம் கிராமத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டு நடைபெறும் அகழாய்வு பணியில் அதிகளவில் மண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பானைகளும், வெவ்வேறு வடிவங்களிலும், வெவ்வேறு நிறத்திலும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே இடத்தில் அதிகளவிலான பானைகள் கண்டறியப்பட்டுள்ளதால் அந்த பகுதி சமையல் கூடம் அல்லது அன்ன சத்திரமாக இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. தானியங்களை சேமித்து வைக்க மண் பானைகளை பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதுமக்கள் தாழி, மனித எலும்புகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி கிராமம் தொல்லியல் அகரமாக விளங்கியதற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த வகையில் அகரம் கிராமம், சமையல் கூடமாகவோ, அன்ன சத்திரமாக இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

Related Stories: