தி.மலை சேத்துப்பட்டு மருத்துவமனையில் பணியாற்றிய தலைமை செவிலியருக்கு கொரோனா உறுதி...! மருத்துவ வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!!!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மருத்துவமனையில் பணியாற்றிய தலைமை செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவிலியருக்கு கொரோனா உறுதியானதால், மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 58,378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,689ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவிலியர்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் மருத்துமனையில் உள்ள அனைவரையும் பீதியடைய செய்துள்ளது. மேலும், அந்த மருத்துவமனையில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை திருவண்ணாமலையில் 1,050 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து, குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: