காஞ்சிபுரத்தில் 2000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!: நோயாளிகளை கையாளுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்!

காஞ்சிபுரம்:  காஞ்சிபுர மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சுகாராரத்துறை அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொடூர கொரோனா வைரஸ் தமிழகத்தை  ஆட்டி படைக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். பின்னர், அவர்கள் வசித்த வீடுகளிளோ அல்லது வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளிளோ எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளோ அல்லது கிருமிநாசினியோ தெளிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் கொரோனா தொற்று பரவிய பகுதி என்று எந்த விதமான தடுப்புகளும் அமைக்கப்படவில்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீடுகளில் வசிக்கும் மற்ற நபர்களுக்கும் எந்த வித கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 3 நாட்களாக கொரோனா பரவிய சம்பவத்தை தொடர்ந்து, அங்கு அதிகாரிகளோ அல்லது சுகாதார பணியாளர்களோ, என யாரும் வரவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக, நகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, கொரோனா பாதித்த பகுதியை அறிய சரியான விலாசம் இல்லாததால், எங்களால் கண்டறிய முடியாமல் இருந்தது, அதனால், இந்த பகுதியில் எந்த வசதிகளும் செய்யமுடியவில்லை எனவும் தற்போது இந்த பகுதியை கண்டறிந்து விட்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் செய்து விடுகிறோம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: