உத்தரபிரதேச மாநிலத்தில் பயங்கரம்..ரவுடிகளால் பிடிக்க முயன்ற டி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை.: மக்கள் அதிர்ச்சி

கான்பூர: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க முயன்போது போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே  உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த  ரவுடி விகாஸ் துபேயை டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ரவுடி விகாஸ் துபே இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது போலீசார் ரவுடிகளை பிடிக்க முயன்ற போது, ரவுடிகளுக்கும்  போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 காவலர்களை ரவுடி கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது. மேலும் பல போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில டிஜிபி எச்.சி அவஸ்தியிடம் உடனடியாக அறிக்கை தாக்கல் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த போலீசார் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். . ரவுடி கும்பலால் டி.எஸ்.பி உட்பட 8 போலீசார் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரபிரதேச மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: