சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு.! பெண் காவலருக்கு பாதுகாப்பு..!! ஐஜி முருகன்

தூத்துக்குடி: லாக் அப் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று தென்மண்டல ஐஜி முருகன் கூறியுள்ளார். லாக்அப் மரணங்ளை தடுக்க தேவையான  முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தென்மண்டல ஐஜி-யாக பொறுப்பேற்றுக்கொண்ட முருகன் பேட்டியளித்துள்ளார். தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி சிறப்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தலைமை காவலர் ரேவதிக்கு தேவையாக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஐஜி தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை, மகன் இரட்டைக் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆணையிட்டிருந்தது. மேலும் வழக்கு விசாரணையின் போது, காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு பேச இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். விடிய விடிய போலீசார் அடித்ததாக மாஜிஸ்திரேட்டிடம் ரேவதி சாட்சியம் அளித்தார். ரேவதியின் சாட்சி அளித்ததால மட்டுமே  உண்மை வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

ரேவதி வேண்டுகோள்:

முன்னதாக சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதி கூறியதாவது. எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உருக்கமுடன் வேண்டுகோள் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: