நெய்வேலி என்.எல்.சி அணுமின் நிலையத்தில் தொடரும் விபத்துகள்...உயர்மட்டக்குழு விசாரணைக்கு என்.எல்.சி நிறுவனம் உத்தரவு..!!

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி 2-வது அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணைக்கு என்.எல்.சி  நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் மோகபத்ரா தலைமையில் உயர்மட்டக்குழு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி நிறுவனத்தில் பாதுகாப்பு பணி என்பது மெத்தமனாக இருப்பதும், அதிகளவு வேலை செய்யப்படுகிறது என்பதும் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், ஊழியர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இதனால், ஊழியர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதேபோல் கடந்த மே மாதம் இதே அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்துள்ளானது. அதில் 8 தொழிலாளர்கள் தீக்காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவற்றில் 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர் தீ விபத்துகள் நிகழ்வதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தொடர் விபத்துகள் ஏற்படுவதை அடுத்து ஓய்வுபெற்ற தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் மோகபத்ரா தலைமையில் உயர்மட்டக்குழு விசாரணைக்கு என்.எல்.சி  நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: