கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதையடுத்து, 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வடக்கு அந்தமான் பகுதியில் 2 நாட்களுக்கு மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: