சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து விழுப்புரம் எஸ்.பி.ஆக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி எஸ்.பி. ஆக மாற்றம்!!!

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துவரும் நிலையில், தூத்துக்குடி எஸ்.பி மீது தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது. எஸ்.பி அருண் பாலகோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து விழுப்புரம் எஸ்.பி.ஆக இருந்த ஜெயக்குமார் தற்போது தூத்துக்குடி எஸ்.பி. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல, தென் மண்டல ஐ.ஐி சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெறுவதால் புதிய ஐ.ஜி.யாக எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஐி,யாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முருகன் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜீ.யாக இருந்து வந்தவர். சாத்தான்குளம் வழக்கில் அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் மீது நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி மற்றும் எஸ்.பி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக தமிழகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஷ்வரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாக பேசிய புகாரில் காவலர் மகாராஜனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: