மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும்: காஞ்சி கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி ஊரடங்கு நாட்களில் ஆற்றுநீரின் தரம் மேம்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், அதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டால், சுற்றுச்சூழல் தரநிலைகளை தொழிற்சாலைகள் முழுமையாக கடைப்பிடிக்க அதிகாரிகளால் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும், சுற்றுச்சூழல் விதிமுறைகயை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: