மேற்குவங்கத்தில் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்களப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 1ல் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும் ஜூலை 1-ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேற்குவங்கத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பேனர்ஜி உத்தரவிட்டிருந்தார். உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர்.

Related Stories: