கால்பந்து உடல் தொடர்புள்ள விளையாட்டு. கொரோனா தொற்று தொடர்பாக அரசாங்கத்தின் உத்தரவுகளை மிக நெருக்கமாக பின்பற்றி வருகிறோம். போட்டிகளை மீண்டும் எப்படி தொடங்குவது என்பது குறித்து பங்குதாரர்களிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை தொடங்கினோம். அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுடன், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வகுந்துள்ள நெறிமுறைகளையும் ஆராய்ந்து, பயிற்சிக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனை இந்திய விளையாட்டுஅமைச்சகம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் கலந்தாலோசிப்போம்.