கொரோனாவிடம் மோடி சரணாகதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பிரதமர் மோடி எந்த திட்டமும் இல்லாமல் கொரோனா வைரசிடம் சரண் அடைந்து விட்டார்,’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் மற்றும் சீனா தாக்குதல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நிலைபாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகின்றார். நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 5 லட்சத்தை கடந்தது. இது குறித்து ராகுல் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நாட்டில் புதிய, புதிய பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது.

நோய் தொற்று பரவுதலை தடுப்பதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை. பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். அவர் கொரோனாவிடம் சரணடைந்து விட்டார். நோய் தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு மறுக்கிறார்,’ என குறிப்பிட்டுள்ளார்.  மேலும், கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய அரசோ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலோ கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக எந்த ஒரு கூட்டத்தையும் நடத்தவில்லை என்பது குறித்த ஊடக அறிக்கையையும் ராகுல் வெளியிட்டுள்ளார்.

Related Stories: