ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, 8-வது முறையாக 4 மாத கால நீட்டிப்பு : தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எட்டாவது முறையாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி விசாரணை ஆணையம்  அமைக்கப்பட்டது. மேலும்  3 மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும்  தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஆணையத்தின் விசாரணை தீவிரமாக நடைபெற வந்த நிலையில், மருத்துவ குழு அமைத்து விசாரணை செய்ய அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம் ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாணையும் நிலுவையில் இருக்கிறது.இந்த நிலையில் விசாரணைக்கு  கொடுக்கப்பட்ட கால அவகாசம் கடந்த  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைந்த நிலையில் 7 வது முறையாக  4 மாதம் கால நீட்டிப்பு செய்து ஜூன் 24ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறக்கப்பட்டு, பல்வேறு காரணமாக 30 மாதங்கள் முடிந்து விட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஒரு வருடமாக ஆணையம் விசாரணை மேற்கொள்ளாமலே காலநீடிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் பிப்ரவரி 24ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 7வது முறையாக 4 மாதம் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வரும் 24ம் தேதியுடன் (புதன்கிழமை) 7-வது முறையாக நீட்டிப்பு முடிவடையுள்ள நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் சார்பாக தமிழக அரசுக்கு 8வது முறையாக காலநீட்டிப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தது. கடிதம் வாயிலாக ஆறுமுகசாமி ஆணையம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, மேலும் 4 மாதமாக கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: