ராமநாதபுரத்தில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து விமானப்படை தளத்தில் 35 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

ராமநாதபுரம்: உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து விமானப்படை தளத்தில் 35 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,105-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 16,922 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 418 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 14,894 பேர் உயிரிழந்த நிலையில் 2,71,697 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தில் 41 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 35 வீரர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 35 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 35 வீரர்கள் உள்பட 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 301 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: