மதுரையில் மீண்டும் ஊரடங்கா?: முதல்வர் முடிவெடுப்பார் என்கிறார் அமைச்சர் உதயகுமார்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மீண்டும் முழு ஊரடங்கு குறித்து, நிலைமையை ஆராய்ந்து முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.மதுரையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் பரிசோதனையை அதிகரிக்க, அதிகரிக்க தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்களின் நலன் காக்கவே அத்துமீறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்பட்சத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு,  தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுரை வழங்கப்படும்.

எந்தவொரு அறிவிப்பாக இருந்தாலும், அது முதலமைச்சர் மட்டுமே அறிவிப்பார். மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தினமும் மாவட்ட நிலைமை குறித்து முதல்வர் கேட்டறிந்து வருகிறார். தனிமைப்படுத்தப்பட்ட முகாம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை உள்ளவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு வருகிறது. வெளியூரிலிருந்து வந்த வசதிபடைத்த சிலரின் நாவின் சுவைக்கேற்ப உணவு கிடைக்காததால் குறை கூறி வருகின்றனர். இது தமிழகத்தில் எங்குமே நடக்காத நிகழ்வு.இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: