தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட் திருப்பி அனுப்பப்பட்டது கொள்முதல் செய்ய தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

சென்னை: கொரோனா பரிசோதனைக்காக வந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தரமற்றதாக இருந்ததால் அதை சீனாவுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக  ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்ததால் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.  சென்னைஐகோர்டில் மக்கள் சக்தி கட்சி தலைவர் வக்கீல் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில்,  கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் வந்ததால் ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே, இந்த கருவிகளை கொள்முதல் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்து.  இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐ.சி.எம்.ஆர், மருந்து கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றிடம் முறையாக தரச்சான்று பெற்றுதான் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டது. ரேபிட் டெஸ்ட் கிட் சரியாக செயல்படாததால் சீனாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. அதனால் இந்த வழக்கில் விசாரிப்பதற்கு ஒன்றும் இல்லை என்றார். இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: