பெலகாவி: கர்நாடகாவில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற மருத்துவ குழுவினர் மீது தனிமை முகாமில் இருந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மரன்ஹோலா என்ற கிராமத்தில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மாநில எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் மராட்டியத்தில் இருந்து திரும்பிய 2 குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 22 பேர் தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்த மருத்துவக் குழுவினர் சென்றபோது தங்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று கூறி அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
