மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கிறார் முதல்வர் எடப்பாடி சேலம் பயணம்

சென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. இது 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும். எனவே, மேட்டூர் அணையில் இருந்து குறுவை  சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு நீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18ம் தேதி அறிவித்திருந்தார்.அதன்படி, நாளை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, தண்ணீர் திறந்துவிட திட்டமிட்டுள்ளார். இதற்காக முதல்வர் எடப்பாடி நேற்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து காரில் சேலம் சென்றார். இன்று சேலத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து நாளை காலை மேட்டூர் அணைக்கு சென்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories: