பா.ஜ.க. நிர்வாகி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா: டெல்லி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: பாஜக தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடந்த நான்கு நாட்களாக கொரோனா அறிகுறிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதியானதால் தற்போது அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவரின் தாயாரான மாதவி ராஜீ சிந்தியாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாதபோதும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே உலக தலைவர்களின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி நிலவரப்படி  பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 65 சதவீத ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக அந்த  கருத்துக்கணிப்பில் தெரிவித்திருந்தது.

இந்த கருத்துக்கணிப்பை குறிப்பிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வாழத்து தெரிவித்துள்ளார். அதில் கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் உலக நாடுகளை பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்துகிறார். நாட்டு மக்களுக்கு ஒருபுறம் பாதுகாப்பு அளித்து கொண்டே மறுபுறம்  உலக நாடுகளுக்கு தேவையான பாதுகாப்புகளை செய்து வருகிறார். இதனால் உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார் என்று பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: