கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்த கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளிலும், கொரோனா கவனிப்பு மையங்களிலும் உள்ள படுக்கைகள் முழுமையாக நிறைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், புதிதாக பாதிக்கப்படுவோருக்கு மருத்துவமனைகளில் பெயரளவுக்கு மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டு, சில மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.  அவ்வாறு அனுப்பி வைக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வீடுகளில் நோயாளிகளை தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் இல்லை.

அவர்கள் வீடுகளில் ஒரே கழிப்பறையை பயன்படுத்துதல், கழிப்பறை இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துவதால், கொரோனா வேகமாக பரவுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா  வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணம். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்புடன் கூடிய தனிமைப்படுத்துதல் கட்டாயமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: