போலீஸ் ஸ்டேஷனுக்கு கலர் ஜெராக்ஸ் பிரிண்டர் வழங்கல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் ஊராட்சி கூட்டமைப்பு தலைவரும், சிற்றம்பக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான ரமணி சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைசெயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன் ஆகியோர் தங்களது சொந்த செலவில் கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள்  பயன்பாட்டிற்காக கலர் ஜெராக்ஸ் மற்றும் பிரிண்டர் மிஷின் ஆகியவற்றை வழங்கினர். அப்போது மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கடம்பத்தூர் பொ.பூபாலன், நயப்பாக்கம் கிளை செயலாளர் ஜி.சிவக்குமார், சிற்றம் த.மகி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: